"சாப்பாடு சரியில்லை என்பதற்காக ஜாமீனா? இதெல்லாம் ஒரு விஷயமா?"- மரியவில்சன்

 
s

ஸ்டாலின் போன்ற முதிர்ச்சி அடைந்த அரசியல்வாதிகளிடம் இருந்து ‘சோப்ளாங்கி அரசு’ போன்ற பக்குவம் இல்லாத வார்த்தைகள் வருவது ஏற்புடையதல்ல என அமைச்சர் மரியவில்சன் கூறியுள்ளார். 


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரியவில்சன், "ஸ்டாலின் போன்ற முதிர்ச்சியும் அனுபவமும் வாய்ந்த தலைவர் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது எதிர்பாராதது. ஒரு தலைவரே இப்படி பேசினால், கீழ்மட்டத் தலைவர்கள் இதைவிட மோசமாகத்தான் பேசுவார்கள். முன்னாள் முதல்வர் இப்படி பேசுவதை மக்களை இழிவுபடுத்தும் செயலாகவே நான் பார்க்கிறேன்.  ஆர்.கே. நகருக்கு டிடிவி தினகரனைத் தொடர்ந்து அழைக்கிறேன்.. ஆனால் அவர் வர மறுக்கிறார். அன்பில் மகேஷ்  செய்த செயல் என்ன? கல்வியில் ஊழல் 300, 400 கோடி ரூபாய். ஆனால், அவர்கள் அங்கு கேட்பது சாப்பாடு சரியில்லை என்று. ‘நான் இதை செய்யவில்லை' என்று மனுவில் கூறியிருந்தால்கூட பரவாயில்லை. ஆனால், சாப்பாடு சரியில்லை என்றெல்லாம் அன்பில் மகேஷ் ஜாமீன் கோருவதா? இதெல்லாம் ஒரு விஷயமா?" எனக் கேள்வி எழுப்பினார்.