"CM மேஜையில் உள்ள அந்த 3 Files சீக்கிரம் சிறப்பா வெளிவரும்"- அமைச்சர் மரியவில்சன்

 
s

தமிழ்நாட்டில் கடன் சுமையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். 

 

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய மரியா வில்சன் , "மேயர் என்பது அவளோ பெரிய பொறுப்பு.. ஆனால் இன்றைய சென்னை மேயர் சிறுபிள்ளைதனமாக மேடையில் அமர்ந்து சிரித்துக்கொண்டிருக்கிறார்.  பிடிஆர் பழனிவேலை நீக்கியதற்கு முக்கிய காரணம் ரூ.30,000 கோடி. அதுதொடர்பான ஆடியோ திமுக ஆட்சியில் வைரலானது.  அதுகுறித்து முதலில் தங்கம் தென்னரசு விளக்கம் அளிக்க வேண்டும் நடப்பு நிதியாண்டில் கடன் வாங்கும் திறன் 21 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. கடன் பத்திரங்கள் மூலம் ரூ.40,500 கோடி திரட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 21 சதவீதம் குறைவாகும். மூலதனச் செலவினத்தைப் பொறுத்தவரை, இதுவரை ரூ.12,346 கோடி செலவிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தமிழ்நாட்டில் கடன் சுமையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  அன்பில் மகேஷ் மீது அவ்வளவு வழக்குகள் உள்ளன.  ஒவ்வொரு வீடியோவா வெளி வந்து கொண்டு இருக்கிறது.  நாங்கள் சொன்னது உண்மைதான்.  பள்ளிக் கல்வித் துறையில் சுமார் ரூ.150 கோடிக்கும் மேலாக பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த கல்வித் துறையிலேயே ஊழல் செய்யக்கூடியவர்கள் திமுக-வினர் என்பது அன்பில் மகேஸ் விவகாரத்தின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. தனது மேஜையில் மூன்று முக்கிய கோப்புகள் இருப்பதாக ஏற்கெனவே பேரவையில் முதல்வர் சொல்லி இருந்த நிலையில், முதல்வர் மேஜையிலுள்ள 3 கோப்புகளின் விவரம் விரைவில் அனைவருக்கும் தெரியவரும் " என்றார்.