மு.க.ஸ்டாலின் சமரசம்- முடிவுக்கு வந்த மாறன் சகோதரர்கள் மோதல்?
தம்பி தயாநிதிக்கு கூடுதல் பங்கு தர அண்ணன் கலாநிதி ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன் குழும நிறுவனர் கலாநிதி மாறன், அந்நிறுவன பங்குகளை முறைகேடாக தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாக சொத்து பிரச்சனையை கிளப்பி அவரது சகோதரர் தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். கலாநிதி மாறன் அவரது மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்ட 8 பேருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து சன் குழும பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. சன் டிவி பங்குகளை கையாளுவது 2003ஆம் ஆண்டு இருந்த நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்றும் நோட்டீசில் தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். மேலும் கலாநிதி மாறனின் சன் டிவி ஏமாற்றுதல், சட்ட விரோத பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் தம்பி தயாநிதிக்கு கூடுதல் பங்கு தர அண்ணன் கலாநிதி ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமரசம் செய்ததையடுத்து மாறன் சகோதரர்கள் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி பாணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு சமரசம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அண்மையில் கலாநிதி மாறன், தயாநிதி மாறன், அன்புக்கரசி ஆகிய மூவரும் மு.க.ஸ்டாலினை சந்தித்த நிலையில், அவர்மாறன் சகோதரர்கள் ஒற்றுமையாகவும் இணக்கமாகவும் செல்ல அறிவுரை கூறியுள்ளார்.


