‘மறக்குமா நெஞ்சம்’- கமிஷனர் அலுவலகத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆஜர்

 
ரகுமான்

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் ஏசிடிசி நிர்வாக இயக்குநர் ஹேமந்த் ஆஜரானார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் நேற்று மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை ஏசிடிசி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில் முறையான பாதுகாப்பு அம்சங்கள், வாகன நிறுத்துமிடம், இருக்கை வசதிகள் சரிவர இல்லை, இதனால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் முதல்வர் கான்வாயும் சிக்கியது. 

இது தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஆய்வு செய்து விட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனையடுத்து ஏசிடிசி நிறுவனர் மற்றும் முதன்மை நிர்வாக இயக்குநர் ஹேமந்த் மற்றும் செந்தில்வேலன் ஆகியோர் சோழிங்கநல்லூரில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகினர்.  இவர்களிடம் நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி குறித்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் 30 நிமிடங்களுக்கு மேல் விசாரணை நடத்தினார். பின்னர் வெளியில் வந்த ஆணையர் அமல்ராஜ் அவர்களிடம் நடத்திய விசாரணை குறித்து கேட்டதற்கு பதிலளிக்கவில்லை. விழா ஏற்பாட்டாளர் ஹேமந்த் ஆணையர் அலுவலகத்தில் மற்றொரு வாயில் வழியாக செல்ல முயன்றார் அவரிடம் விளக்கம் கேட்டபோது காரில் ஏறி சென்று விட்டனர்.