மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி- சென்னை மாநகராட்சி நோட்டீஸ்

சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கான கேளிகை வரியை ஏசிடிசி நிறுவனம் செலுத்தாதாதால் விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் அவதிப்பட்டதுடன், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் பொறுப்பேற்று மன்னிப்பு கோரினார். இந்த சூழலில் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் சிஇஓ ஹேமந்த் ராஜா, பார்வையாளர்கள் எவ்வளவு விலை கொடுத்து டிக்கெட் வாங்கி இருந்தாலும் அந்த டிக்கெட் தொகை முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கான கேளிகை வரியை ஏசிடிசி நிறுவனம் செலுத்தாதாதால் விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. மொத்த டிக்கெட் விற்பனையில் 10 சதவீதம் கேளிக்கை வரியை மாநகராட்சிக்கு ஏசிடிசி நிறுவனம் செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. குறிப்பிட்ட நாட்களுக்குள் ஏசிடிசி நிறுவனம் கேளிக்கை வரியினை செலுத்த தவறினால் விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநாகராட்சி எச்சரித்துள்ளது.