மரக்காணம் விஷச்சாராய வழக்கு- 1,250 லிட்டர் மெத்தனால் ரூ.60,000-க்கு விற்பனை

 
கள்ளச்சாராய மரணம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் விஷச்சாராயம் குடித்து அடுத்தடுத்து 14 பேர் உயிரிழந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு 11 பேரையும் மூன்று நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. சிபிசிஐடி செய்தி போலீசார் 11 பேரையும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு அதில் 5 பேர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மீதமுள்ள சென்னை கெமிக்கல் கம்பெனி உரிமையாளர் இளையநம்பி, புதுவை முக்கிய சாராயவியாபாரிகள் ஏழுமலை, பர்க்கத்துல்லா என்கிற ராஜா, மற்றும் கூட்டாளிகள், பிரபு, ராபர்ட், அமரன் ஆகிய 6 பேரையும் விசாரணை முடிந்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) அகிலா அவர்கள் முன்னிலையில் சிபிசிஐடி  போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஆஜர் படுத்தினார். கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற விசாரணையில் சென்னை மதுரவாயல் பகுதியில்  இயங்கி வந்து மூடப்பட்ட ஜெயசக்தி கெமிக்கல் நிறுவனத்தில் இருந்து 6 பாரல்களில் 1200 லிட்டர் மெத்தனாலை புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த பிரபல சாராய வியாபாரி ஏழுமலையிடம் கெமிக்கல் கம்பெனி உரிமையாளர் இளையநம்பி விற்றுள்ளார்.

அதில் ஒரு பாரலை மரக்காணத்திலும், இரண்டு பாரல்களை செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஏழுமலை விற்பனை செய்தது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனைத்  ஏற்கனவே விற்று வரும் எரி சாராயத்துடன் கலந்து மரக்காணம் பகுதி சாராய வியாபாரிகள் மெத்தனாலை விற்பனை செய்ததும் சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மரக்காணம் பகுதி சாராய வியாபாரிகள் இடமிருந்து 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 17 கேன்களில் 595 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்து அது என்ன சாராயம் என்பது குறித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். மேலும் இந்த விஷச்சாராயம் குடித்து அடுத்தடுத்து உயிரிழந்ததை தொடர்ந்து ஏழுமலை வாங்கிய 6 பாரல்களில் 3 பாரல்களை அதாவது 600 லிட்டர் மீண்டும் இளையநம்பிடமே திருப்பி அனுப்பியதும் சிபிசிஐடி போலீஸ் விசாரணை தெரிய வந்துள்ளது.

விஷச்சாராய வழக்கில் சிபிசிஐடி காவல் முடிந்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கெமிக்கல் கம்பெனி உரிமையாளர் இளையநம்பி, புதுவை சாராய வியபாரிகள் ஏழுமலை, பர்க்கத்துல்லா (எ) ராஜா, அமரன், ராபர்ட், பிரபு,ஆகிய 6 பேரையும் வரும் 1 ஆம் ஆம் தேதி வரை கடலூர் மத்திய சிறையில் அடைக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி(பொறுப்பு) அகிலா உத்தரவு பிறப்பித்தார். அதனை தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.