“மக்கள் சேவை செய்வேன்”- மாரியம்மன் சாட்சியாக சத்தியம் செய்த மரகதம் குமரவேல்
வீராணக்குன்னம் பகுதியில் மரகதம் குமரவேல் பிரச்சாரம் செய்தபோது உள்ளே வரக்கூடாது எனக்கூறி ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மதுராந்தகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் த.வெ.க. வேட்பாளர் பிரச்சாரம் செய்தார். மரகதம் குமரவேல் பிரச்சாரம் செய்யும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், தொகுதிக்குட்பட்ட சிறுநல்லூர் ஸ்ரீமாரி எல்லையம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார் . மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்த நிலையில், மாரியம்மன் சாட்சியாகவும் மக்கள் சாட்சியாகவும் மக்கள் சேவை செய்வேன் என சத்தியம் செய்து வாக்கு சேகரித்தார்.
முன்னதாக மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணம் பகுதியில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது கிராமத்திற்குள் பிரச்சாரத்திற்கு வரக்கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடதக்கது.

