#BREAKING முதல்வர் விஜயை பார்க்க வந்த பலர் மயக்கம்

 
#BREAKING முதல்வர் விஜயை பார்க்க வந்த பலர் மயக்கம்

மதுரையில் முதலமைச்சர் விஜயை காண சாலையோரம் கடும் வெயிலில் நின்ற 10க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.


மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கிய முதல்வர் விஜய், புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்தார். முதலமைச்சர் விஜய் செல்லும் வழியெங்கும், ஏராளமானோர் அவரை காண சாலையோரம் காத்திருந்தனர். கடும் வெயிலில் காலை முதல் நீண்ட நேரம் காத்திருந்ததால் 
10க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் அனைத்தும் சாலையின் நடுவில், மருத்துவமனை முன்பாக நிறுத்தப்பட்டதால், ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறி சாலையிலேயே நின்றது.