“நான் ஒன்னும் பிச்சை எடுக்கல? என்ன போய் இப்படி டம்மியா நிக்க வெக்குறீங்களா?”- மன்சூர் அலிகான் ஆவேசம்

 
“நான் ஒன்னும் பிச்சை எடுக்கல? என்னை போய் இப்படி டம்மியா நிக்க வெக்குறீங்களா?”- மன்சூர் அலிகான் ஆவேசம்

என்னோட சீன எதுக்கு கருப்பு படத்துல இருந்து தூக்குனீங்க..? இப்போ என் பசங்க கேட்குறாங்க., நான் என்ன பதில் சொல்றது..? நான் தான் உண்மையான கருப்பன்..  என நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற `ஆல் பாஸ்' திரைப்பட நிகழ்வில்  பேசிய நடிகர் மன்சூர் அலிகான், “என்னோட சீன எதுக்கு கருப்பு படத்துல இருந்து தூக்குனீங்க..? இப்போ என் பசங்க கேட்குறாங்க., நான் என்ன பதில் சொல்றது..? நான் தான் உண்மையான கருப்பன்..  இவங்களாம் அரைக்கால் டிராயர் போடும் போதே நான் தயாரிப்பாளர் ஆனவன்..  350-க்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சிருக்கேன்.. என்னை போய் இப்படி டம்மியா நிக்க வெக்குறீங்களா..?  எல்லாம் ஹீரோவும் பில்டப்லதா வாழ்ந்துட்டு இருக்காங்க.. நான் ஒன்னும் பிச்சை எடுக்கல..?  

நான் கஷ்டப்பட்டு ஆடினேன்.. காட்சிகள் எங்கே? – ரிங்க் மேலே நின்று பாட்டில்களை வீசிக்கொண்டு டான்ஸ் ஆடினேன்.. ஆனால், ஒரு காட்சியும் படத்தில் வரவில்லை! சூர்யாவுக்கு இவ்வளவு பில்ட்அப் காட்சிகள் வைக்கிறீர்கள்.. என்னை மட்டும் டம்மி மாதிரி நிற்க வைத்திருக்கிறீர்கள்.. நான் கஷ்டப்பட்டு ஆடிய 2–4 நிமிட காட்சிகளையாவது வைத்திருக்கலாம். இது எந்த வகையிலும் நியாயம் அல்ல. இதுபோன்று பல நடிகர்களின் உழைப்பை முறைகேடாக இருட்டடிப்பு செய்யப்படுகிறது. என் பையன் எதோ காலேஜ் பையன் கொடுத்தானு அந்த தப்ப பண்ணிட்டான்.. அதுக்குனு இன்னுமா அத சொல்லுவீங்க..? நான் என்ன நல்ல வேலை செய்தாலும் அதையே தான் சொல்றாங்க. சமூக வலைதளங்களில் என்னையும் என் மகனை பற்றியும் தப்பாக பேசுவார்கள்.. இப்படியும் ஒரு அழுக்கு கூட்டம்.. இன்று பல திரைப்படங்களின் விளம்பரங்களிலும் கதாநாயகர்களின் பெயர்கள் மட்டுமே பிரம்மாண்டமாக போடப்படுகின்றன. ஆனால் அந்த படம் வெற்றி பெற உழைத்த ஒளிப்பதிவாளர், எடிட்டர், கலை இயக்குநர், பாடலாசிரியர்கள் மற்றும் துணை நடிகர்களின் பெயர்கள் எங்கு இருக்கின்றன என்று கூடத் தெரியாத அளவுக்கு மிகச்சிறிய எழுத்துகளில் ஓரம் கட்டப்படுகின்றன. ” என பேசினார்.