தமிழ்நாடே என் பக்கம் இருக்கிறது- மன்சூர் அலிகான்

 
பாஜகவையே விமர்சனம் பன்றீங்களா?…. மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு!!

தமிழ்நாடே என் பக்கம் இருக்கிறது  என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

Nadigar Sangam condemns Mansoor Ali Khan for derogatory comments on Trisha  - The Hindu


லியோ திரைப்படத்தில் நடிகர் த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதேபோல் லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அதாவது தான் கூறிய கருத்தை தவறாக சித்தரித்து சிலர் வெளியிட்டு வருவதாக கூறியிருந்தார்.  

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், “த்ரிஷா விவகாரத்தில் நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறை செய்துள்ளது. நான் பேசியது தொடர்பாக நடிகர் சங்கம் விளக்கம் கேட்கவே இல்லை. மக்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். தமிழ்நாடே என் பக்கம் இருக்கிறது. பாராட்டி பேசியதற்காக த்ரிஷா தான் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். த்ரிஷா கோவப்பட்டு பேசியுள்ளார். அடுத்த படத்தில் நானும் த்ரிஷாவும் இணைந்து நடிப்போம்” என்றார்.