மன்சூர் அலிகான் விவகாரம்- விரைவில் நல்ல முடிவு வரும்: நடிகர் சங்கம்

 
mansoor alikhan

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பாக நடிகர் மன்சூர்அலிகானுடன் சமாதானமாக போக நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

Image

லியோ திரைப்படத்தில் நடிகர் த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதேபோல் லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அதாவது தான் கூறிய கருத்தை தவறாக சித்தரித்து சிலர் வெளியிட்டு வருவதாக கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் சங்கம்  அறிவுறுத்தியிருந்தது. ஆனால் நடிகை த்ரிஷா பற்றி நான் தவறாகப் பேசவில்லை, நடிகர் சங்கம் இவ்விவகாரத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. நீதிமன்றத்தில் கூட எதிர் தரப்பின் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன. 4 மணி நேரத்தில் நடிகர் சங்கம் அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என நடிகர் மன்சூர் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் மன்சூர் அலிகான் எந்த வகையிலும் பெண்களை பற்றி தவறாக பேசும் மனிதர் அல்ல, அதிலும் தன் சக பெண் நடிகர்களை பற்றி எந்த தரக்குறைவான பேச்சையும் பேசுபவர் அல்ல, நடிகர் மன்சூர் அலிகான் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் செயற்குழு கூட்டத்தில் அனைவரிடமும் கலந்தாலோசித்து, இரு தரப்பினரையும் விசாரித்த பிறகு முடிவு தெரிவிக்கப்படும் என்றும் நடிகர் சங்கம் கூறியுள்ளது.