மன்சூர் அலிகானின் பரிதாப நிலை - பங்கம் செய்த வேலூர் மக்கள்!!

 
tn

நடிகர் மன்சூர் அலிகான்  350 வாக்குகள் பெற்றுள்ளார்

mansoor ali khan

வேலூர் மக்களவைத் தொகுதியில் வேலூர் ,ஆம்பூர் ,வாணியம்பாடி, அணைக்கட்டு, கே.வி. குப்பம் , குடியாத்தம் ஆகிய 6 சட்டப்பேரவையில் தொகுதிகள்  அடங்கியுள்ளது.  வேலூரில் இஸ்லாமியர்கள் வாக்குகள் அதிகம்.  வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக ஐந்து முறையும் , காங்கிரஸ் மூன்று முறையும் , அதிமுக பாமக தலா ஒரு இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன. வேலூரில்  திமுக சார்பில் கதிர் ஆனந்த் களமிறக்கப்பட்ட நிலையில்,  அதிமுக சார்பில் பசுபதியும் , பாஜக சார்பில் ஏசி சண்முகமும்,  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மகேஷ் ஆனந்தும் களம் இறக்கப்பட்டனர்.  அத்துடன் வேலூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சையாக போட்டியிட்டார். 

mansoor-ali-khan-3

இந்நிலையில் வேலூரில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் இரண்டு சுற்றுகளில் மொத்தம்350 வாக்குகள் பெற்றுள்ளார். காலை முதலே வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து கண்காணித்து வந்த அவர், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை சந்தித்து பேசினார்.