மணிப்பூர் கலவரமா, பாஜக-வின் கொலைக்களமா? - மனோ தங்கராஜ் கேள்வி

 
mano mano

பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்கு அனுப்ப வேண்டியது இராணுவத்தை அல்ல, நீதி தழுவிய அமைதிக்கான உத்தரவாதத்தை என முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். 

இது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் நரேந்திர மோடி அனுப்ப வேண்டியது இராணுவத்தை அல்ல, நீதி தழுவிய அமைதிக்கான உத்தரவாதத்தை. பிரிட்டன் சாம்ராஜ்யத்திடமிருந்து விடுதலை பெற அண்ணல் காந்தி இராணுவ உதவியை நாடவில்லை. கத்தியின்றி இரத்தமின்றி வன்முறையற்ற அறவழியை தேர்ந்தெடுத்தார். 


சொந்த மக்களிடம் அமைதியை ஏற்படுத்த எதையும் நீங்கள் கையிலெடுக்க வேண்டாம், மாறாக #மதவெறி வெறுப்பு பிரச்சாரத்தை கைவிட்டால் போதும். 
மதப்பாதுகாப்பு குழுவினர் என்ற பெயரில் கொலைப்பாதகம் செய்யும் கலவரக்காரர்களை தண்டித்தால் போதும்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி மறுக்கப்படுவது ஐனநாயகத்திற்கு உகந்ததல்ல என குறிப்பிட்டுள்ளார்.