சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

 
அ அ

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட KOMAKI எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த தங்கமணி என்பவர் சாந்தி தியேட்டர் எதிர்புறம் செல்போன் கடை நடத்தி வருகிறார் . இவர் கோமாக்கி நிறுவனத்தின் பேட்டரியில் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் பைக்கை கடந்த 4 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்திருக்கிறார். இந்நிலையில்  நேற்று  இரவு  கடை வாசலில் நின்ற எலக்ட்ரிக் பைக்கை ஸ்டார்ட் செய்த போது புகை வர தொடங்கியது . பின்னர் அதிக புகை வெளியேறி வாகனம் தீபிடித்து எரிந்தது . அருகில் இருந்தவர் தீயணைப்பு கருவி மூலம் தீயை அனைத்தார். இந்த விபத்தில் எலக்ட்ரிக் பைக் தீயில் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது . எலக்ட்ரிக் பைக் தானாக தீபற்றி எரிந்தது தொடர்பாக மன்னார்குடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் .