மதுரையில் மஞ்சுவிரட்டு - இளைஞர் பலி

 
மஞ்சுவிரட்டு

மதுரை, எலியார்பத்தியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

vellinippatti manjuvirattu: 500 bulls attack - 20 injured | வெள்ளினிப்பட்டி  மஞ்சுவிரட்டு; 500 காளைகள் சீறிப்பாய்ந்தன - 20 பேர் காயம்

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு வடமாடு, மஞ்சுவிரட்டுக்கு என்று தனி முக்கியத்தவம் உண்டு. இந்த பகுதியில் காளைகள் வளர்ப்போர் அதிகமாக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தென் தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டின் முதல் வாரத்தில் குறிப்பாக மார்கழி மாதம் 3-வது வாரம் வெள்ளிக்கிழமை பிரமாண்டமான முறையில்  இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். 

அதன்படி மதுரை, எலியார்பத்தியில்  மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. முதலில் கோவில் காளைகள் அவிழ்ந்து விடப்பட்டன. அதை தொடர்ந்து கட்டு மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. மைதானத்தில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை இளம் காளையர்கள் காளைகளுக்கு போக்கு காட்டி அடக்கினர். ஒரு சில காளைகள் பிடிபட்டன பல காளைகள் பிடிபடாமல் போக்குகாட்டி சென்றன. இதில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர். மதுரை, எலியார்பத்தியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார்.  இளைஞரின் இடது மார்பில் காளை குத்தியதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.