ஆர்எஸ்எஸ் முகவராக ஆளுநர் ரவி - தேநீர் விருந்தை புறக்கணிக்கும் மனிதநேய மக்கள் கட்சி

 
jawahirullah

குடியரசு தின விழா தேனீர் விருந்தை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. 

rn ravi

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம், சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வழங்கப்படும். இதில் முதல்வர், அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் நாளை மறுநாள் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தனது சமூகவலைதள பக்கத்தில், ஆர் எஸ் எஸ் முகவராகத் தமிழ்நாட்டின் ஆளுநர் பதவியில் அமர்ந்திருக்கும் ஆர் என் ரவி நடத்தவுள்ள குடியரசு தின விழா தேனீர் விருந்தை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கும்.


தேசத் தந்தை காந்தியடிகளையும் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் ஆளுநர் ரவியை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.