“இண்டியா கூட்டணி பிரதமர் வேட்பாளருக்காக விஜய் பிரச்சாரம் செய்வார்” - மாணிக்கம் தாகூர்
Sep 9, 2026, 20:15 IST1788965107433
இண்டியா கூட்டணி பிரதமர் வேட்பாளருக்காக விஜய் பிரச்சாரம் செய்வார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
தவெக தோழமைக் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், “பிரதமர் வேட்பாளரை இந்தியா கூட்டணி அறிவிக்கும். பிரதமர் வேட்பாளரை மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி ஏற்கும். பிரதமர் வேட்பாளருக்கு ஆதரவாக CM விஜய் பிரசாரம் செய்வார். கூட்டணிக்குள் புதிய கட்சிகள் வருவதற்கான அடுத்த நகர்வுகள் எடுக்கப்படும். கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும். இடைத்தேர்தலுக்கான இக்கூட்டணியின் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள். இடைத்தேர்தல் வெற்றிக்காக கூட்டணி கட்சிகள் இணைந்து பாடுபடும். தமிழ்நாட்டின் நலனுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி” என்றார்.

