“அட்டனென்ஸ் எடுப்போம்... அஞ்சு மணி வரை இருக்கனும், சாப்பிடக்கூடாது”- உண்ணாவிரதத்தில் மாணிக்கம்தாகூர் அதிரடி

 
ச் ச்

சினிமா படமாக இருந்தாலும் சரி வேலைவாய்ப்பாக இருந்தாலும் சரி மோடிக்கும், அமித்ஷாவுக்கும் உள்ள திமிரு சாமானிய மக்களை அவமானப்படுத்தும் திமிராகும், மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

MP Manickam Tagore

விருதுநகர் ரயில் நிலைய நுழைவாயில் முன்பு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதில்,விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேசியதாவது, உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் முடிவடையும் வரை இருக்க வேண்டும். மாலையில் அட்டனன்ஸ் எடுப்போம். மாலை 5 மணிவரை இருப்பவர்கள் தான் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டதாக அர்த்தம்.மற்றவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடக்கி வைக்க வந்தவர்கள் என்று அர்த்தம் என ஹாஸ்யமாக பேசினார். அவர் மேலும் பேசியதாவது, காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தங்களை வருத்தி மக்களுக்காக போராடுவது தான் மகாத்மா காந்தியின் மிக முக்கியமான தத்துவம். மற்றவர்களை திட்டுவதோ இழிவுபடுத்து காங்கிரஸ் கட்சியின் பழக்கம் கிடையாது. அது மற்ற கட்சிகளுக்கு பழக்கம். 

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தங்களை தாங்களே வருத்திக் கொண்டு மக்களுக்காக குரல் கொடுப்பதுதான் காந்தி-காமராஜர் வழியிலான காங்கிரஸ். நாம் எல்லோரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது பாஜகவினர் பொங்கல் வைக்கும் திமிரை பார்த்தீர்களா?. இதுதான் பாஜக காரர்களின் வக்கிர புத்தி. நாம் இங்கே ஏழை எளிய மக்களின் வேலையை தூக்கி விட்டீர்களே என்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். மக்கள் நன்றாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ஆணவத்தை ஆங்காரத்தை மக்கள் வீழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை முழுமையாக இருக்கிறது. பாஜகவை பொறுத்தவரை சினிமா படமாக இருந்தாலும் சரி வேலைவாய்ப்பாக இருந்தாலும் சரி மோடிக்கும் அமித்ஷாவுக்கும் இடையே உள்ள திமிரு.சாமானிய ஏழை எளிய மக்களை அவமானப்படுத்தும் திமிருக்கு தமிழகத்திலும் விருதுநகரிலும் சரியான பாடம் கிடைக்கும் என்றார்.