“செப்.9-ல் தவெக கூட்டணிக்கு பெயர் சூட்டப்படும்” - மாணிக்கம் தாகூர்..!
செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் தவெக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தாங்கள் பங்கேற்க உள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.தவெக கூட்டணி தொடர்பாக செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தவெக ஆதரவு கட்சிகள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் சூட்டப்பட்டு அறிவிக்கப்பட இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கூட்டணிக்கு பெயர் சூட்டப்படுவதுடன், அதன் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டணி நல்ல நிலைக்கு செல்ல வேண்டும் என்றும், பலமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து பிரச்னைகளிலும் கூட்டணி கட்சிகள் ஒருமித்த கருத்தை எடுக்க வேண்டும் என்பதே தங்களது எண்ணம் என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டம், தமிழக அரசியல் களத்தில் தவெக கூட்டணி தொடர்பான முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

