உச்சக்கட்ட அதிருப்தி! தேர்தல் பொறுப்பில் இருந்து மாணிக்கம் தாகூர் விலகல்

 
அதிருப்தியின்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மாணிக்கம் தாக்கூர்.

Image

ராகுல் காந்தி புதிய வேட்பாளர்கள் பட்டியலை உருவாக்க அறிவுறுத்தினார். அதேபோல் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரும் தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியாக திமுகவை சாடி வந்தார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட திமுகவை விமர்சித்தது பேசுபொருளானது.

இந்நிலையில் தமிழ்நாடு தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பொறுப்பிலிருந்து மாணிக்கம் தாகூர் விலகினார். பதவி விலகல் கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு அனுப்பியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் குழப்பம் நீடிக்கும் நிலையில், தனது விலகல் குறித்து மாணிக்கம் தாகூர் விரைவில் விளக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வது குறித்த அதிருப்தியில் இருந்து வரும் மாணிக்கம் தாக்கூர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.