ராதிகா சரத்குமாரை பின்னுக்கு தள்ளிய மாணிக்கம் தாகூர்

 
radhika

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்,  பாஜக சார்பில் நடிகை  ராதிகா,  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். இன்று  மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 ,மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. 

dmk

விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை வகிகிகிறார் வகிக்கிறார்.

தேனி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 3925 வாக்குகள் பெற்று முன்னிலை

Sarathkumar

திருச்சி தொகுதியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் துரை வைகோ 799 வாக்குகள் பெற்று முன்னிலை


கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஐயாயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலை - பாஜக வேட்பாளர் அண்ணாமலை 1500க்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார்