“இந்த மரியாதைதான் நாங்கள் கேட்டோம்”- மாணிக்கம் தாகூர்
தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான திரு. விஜய் அவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு நேரில் வந்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தது அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடு என காங்கிரஸ் எம்பி மாணிக்கம்தாகூர் கூறியுள்ளார்.
நாம் கேட்ட இந்த மரியாதைதான் இது.
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) May 12, 2026
கூட்டணியில் பரஸ்பர மரியாதையே மிக முக்கியம்.
தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான திரு @TVKVijayHQ அவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு நேரில் வந்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தது அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடு.
அதேபோல், எங்கள்… pic.twitter.com/ogLJoQdsOn
இதுதொடர்பாக மாணிக்கம்தாகூர் தனது எக்ஸ் தளத்தில், “நாம் கேட்ட இந்த மரியாதைதான் இது.கூட்டணியில் பரஸ்பர மரியாதையே மிக முக்கியம். தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான திரு. விஜய் அவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு நேரில் வந்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தது அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடு. அதேபோல், எங்கள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.ராஜேஷ்குமார் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டது கூட்டணி ஒற்றுமையையும் பரஸ்பர மரியாதையையும் காட்டுகிறது. இதுவே மதச்சார்பற்ற கூட்டணியின் பலம். நாளை வெற்றி நமதே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

