"கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை அதிமுகவுக்கு பொருந்தும்"- மாணிக்கம் தாகூர்

 
s

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, இரட்டை இலையை வைத்துக் கொண்டே டெபாசிட் இழந்து வரும் அதிமுகவிற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும் என தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில், “'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை' யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, இரட்டை இலையை வைத்துக் கொண்டே டெபாசிட் இழந்து வரும் அதிமுகவிற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும்! மத்தியில் பாஜகவிற்கு அடிமையாக இருந்துவிட்டு, இப்போது கொள்கை பேசும் இபிஎஸ்-ன் இரட்டை வேடத்தை மக்கள் அறிவார்கள். எங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு, உங்கள் கட்சியை முதலில் காப்பாற்றிக் கொள்ளுங்கள் எடப்பாடியாரே! ” எனக் குறிப்பிட்டுள்ளார்.