"நம்மளே 4 எம்.எல்.ஏ ஜெயிக்குறதுக்கு அ.தி.மு.க-பா.ஜ.க கிட்ட கதை ஓட்டிட்டு இருக்கோம்.. நீங்க காங்கிரஸ் பத்தி பேசலாமா?"- மாணிக்கம்தாகூர்
பாமக தலைவர் அன்புமணி காங்கிரஸ் குறித்து விமர்சனம் செய்ததற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அன்புமணி பேசுவதை பார்த்து சிரிப்பு வருகிறது. முதலில் உங்கள் கட்சி வேலையை பாருங்கள். மோடி அரசு மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசிடம் கேட்க தேவையில்லை என சொல்கிறது. மேகதாது விவகாரத்தில் கேட்ட கேள்விக்கு முதலில் பதில் கூறுங்கள். இதனை கண்டித்து உங்களால் பேச முடியுமா? அண்ணே ஏன் இந்த பதட்டம்? நம்மளே 4 எம்.எல்.ஏ ஜெயிக்குறதுக்கு அ.தி.மு.க-பா.ஜ.க கிட்ட கதை ஓட்டிட்டு இருக்கோம்.. நீங்க காங்கிரஸ் பத்தி பேசலாமா? முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க Mr.அன்புமணி. காங்கிரஸை பற்றி நீங்க எப்படி பேசலாம்... நாங்க எதிர்க்கட்சி சார்.. மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரை பேசவிடாமல் பாஜகவினர் தடுக்கிறார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திற்கு வருவதே இல்லை” என்றார்.

