தமிழிசை தோசை சுட்டாரா? முருகன் மேனேஜர் சீட்டை தேய்த்தாரா? அண்ணாமலைக்கு கேள்வி

 
annamalai

தமிழ்நாட்டின் பாஜக மாநில தலைவராக இருந்த அக்கா மேதகு தமிழிசை அவர்கள் தோசை,இட்லி சுட்டார்கள் என்று சொல்றீயா தம்பி ? மாண்புமிகு அமைச்சர் முருகன் அவர்கள் மேனேஜரா சீட் தேய்த்து பின்னாடியே போய் கை காலில் விழ்ந்தாருன்னு சொல்றியா தம்பி? என எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tamil Nadu BJP chief Annamalai indulging in 'dead body' politics and  creating nuisance: Congress MP- The New Indian Express

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, “அண்ணாமலை தமிழகத்துக்கு தோசை சுடவோ, இட்லி சுடவோ வரவில்லை. பாஜகவின் மேனேஜர் சீட்டை தேய்த்துக்கொண்டு போக வரவில்லை. பாஜக தலைவராக வந்துள்ளேன். நான் தலைவன் தலைவனாகதான் முடிவெடுப்பான். ஜெயலலிதா எப்படி முடிவெடுப்பாரோ அதேபோல்தான் நானும் முடிவெடுப்பான். தலைவர்கள் முடிவெடுத்தால் நான்கு பேர் வெளியேறதான் செய்வேன். கட்சி வளர்ச்சிக்கு என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அதனை துணிந்து எடுப்பேன்” எனக் கூறியிருந்தார். 

அதை கிண்டல் செய்யும் விதமாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டின் பாஜக தலைவராக இருந்த அக்கா மேதகு தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தோசை,இட்லி சுட்டார்கள் என்று சொல்றீயா தம்பி ? மாண்புமிகு முருகன் அவர்கள் மேனேஜரா சீட் தேய்த்து பின்னாடியே போய் கை காலில் விழ்ந்தாருன்னு சொல்றியா தம்பி? மேதகு ஆளுநர் தமிழிசை அவர்களையும் மாண்புமிகு அமைச்சர் முருகன் அவர்களையும் அவமான படுத்திய தம்பி அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.