"இது பதவி அல்ல; புதிய தொடக்கம்" - மாணிக்கம் தாகூர் பேட்டி
Jun 29, 2026, 17:00 IST1782732657993
59 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிரிஷ் சோடங்க, “இது ஒரு புதிய தொடக்கம். செல்வபெருந்தகை முன்னெடுத்த பணிகளை மாணிக்கம் தாகூர் தொடர்வார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இறு பொறுப்பேற்கிறார் எம்பி மாணிக்கம் தாகூர்” என்றார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், “செல்வபெருந்தகையிடம் இருந்த பொறுப்பை நான் பெற்றுக் கொள்கிறேன், இது பதவி அல்ல... 59 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது” என்றார்.

