"நாக்கை அடக்கி பேசினால் சீமானுக்கு மரியாதை... உங்க தம்பி உதயநிதியை ராஜினாமா செய்ய சொல்லுங்க! நானும் ராஜினாமா செய்கிறேன்”- மாணிக்கம் தாகூர்
அனிதா ராதாகிருஷ்ணன் எப்போது சீமானுக்கு சீர் கொண்டுபோனாரோ அப்போதே ஏதோ டீலிங் நடப்பது தெரிந்தது என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம்தாகூர், “கலைஞர் மறைவுக்கு பிறகு திமுக எந்த திசையில் சென்றிருக்கிறது என பாருங்கள். உண்மையான திமுகவினர் வீட்டில் இருக்கிறார்கள், வசூலுக்காக அழைத்து வந்தவர்களை வைத்துதான் இப்போது கட்சி நடக்கிறது. திமுகவை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன், என்னுடைய தேர்தலுக்கு உழைத்தவர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் வீட்டில்தான் இருக்கிறார்கள். இப்போது புதிது புதிதாக ஆட்கள் கிளம்பியிருக்கிறார்கள். அதிகாரத்தில் இருக்கும்போது வந்தவர்கள். அனிதா ராதாகிருஷ்ணன் எப்போது சீமானுக்கு சீர் கொண்டுபோனாரோ அப்போதே ஏதோ டீலிங் நடப்பது தெரிந்தது. சீர் என்ற பெயரில் பெட்டி சென்றதால் சீமான் இப்படி பேசுகிறார். 30 நாளாக இந்த கதறல்... திமுக தயவில் பெற்ற எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சீமான் கூறுகிறார்.
காங்கிரஸ் ஓட்டு வாங்கி ஜெயிச்ச உங்க தம்பி உதயநிதியை ராஜினாமா செய்ய சொல்லுங்கள், நானும் ராஜினாமா செய்கிறேன் இந்த சவாலை ஏற்பாரா சீமான்? சொந்த மாவட்டத்தில் டெபாசிட் வாங்க முடியல.. இந்த வீர வெங்காய வசனம் எங்களுக்கும் தெரியும்.. தேர்தல் கொடுத்த அதிர்ச்சி இவ்வளவு நாட்களாக உதயநிதியிடம் இருந்து வந்த புலம்பல் தற்போது சீமானிடம் இருந்து வருகிறது.. நாக்கை அடக்கிப் பேசினால் சீமானுக்கு மரியாதை கிடைக்கும். திமுக அடித்த கமிஷனை கூட்டணி தர்மத்துக்காக வெளியே சொல்லவில்லை” என்றார்.

