“திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்துனீங்கள்ள... பல உண்மைகள் வெளிவரும்! பொறுத்திருப்போம்”- திமுகவை சாடிய மாணிக்கம்தாகூர்
22 ஆண்டுகள் திமுகவுடன் கூட்டணியில் இருந்துவிட்டு அவர்களிடம் மரியாதை நிமித்தமாக நேரடியாக பார்த்து சொல்லிவிட்டு சென்றிருக்கலாமே என்ற கேள்விக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், “ரொம்ப மகிழ்ச்சியான தருணம்.. முதலமைச்சர் விஜய் தலைமையில் நேர்மையான நல்லாட்சி தொடரும்.. புகழ் அனைத்தும் கிரிஸ் ஜோடங்கரை சேரும்.. முதலமைச்சர் விஜய் சொன்ன வார்த்தையை அப்படியே காப்பாற்றியிருக்கிறார். 50 ஆண்டுகால நடைமுறை உடைக்கப்பட்டிருக்கிறது. அதிகாரத்தில் பங்கு இன்று உறுதியாகியாகிறது. அடாவடித்தனம் செய்ய தெரியாதவர்கள் ஆடம்பர அரசியல் செய்ய தெரியாத காங்கிரஸ்காரர்கள் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் யாரோடு சேர மாட்டோம் என்று சொல்லிக்கொண்டிருந்தீர்களோ அவர்களோடு திரைமறைவில் பேச ஆரம்பித்தவுடன் நாங்கள் அவர்களிடம் சொல்லாமல் சென்றுவிட்டோம் என்று சொல்வதெல்லாம் எந்த விதத்தில் நியாயம். பல உண்மைகள் வெளிவரும். அதனால் பொறுத்திருப்போம். முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் நேர்மையான மற்றும் நல்ல ஆட்சி அமையும் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. பல அவமானங்கள் விமர்சனங்கள் பிறகு இப்படி ஒன்று நடந்திருக்கிறது. 59 வருட ஏமாற்றங்களுக்கு விடை கிடைத்திருக்கிறது.. இதுவரைக்கும் இருந்த மாடலை மாற்றி இருக்கிறார் முதலமைச்சர் விஜய். மே 4ஆம் தேதி மாலையிலேயே திமுக – பாஜக இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது” என்றார்.

