“மரியாதை தராவிட்டால்... திருப்பி அடிப்போம்”- மாணிக்கம் தாகூர்

 
“பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்” – மாணிக்கம் தாகூர் “பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்” – மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ்தான் என் உயிர், மரியாதை, அன்புதான் கேட்கிறோம் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.


 
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், “திமுகவிடமிருந்து மரியாதையை மட்டும் தான் எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் திருப்பி அடிப்போம். திமுக செய்தவற்றிற்காக பழியை சுமந்தவர்கள் காங்கிரசார். ராகுலுக்கு கிடைக்கும் மரியாதை காங்கிரஸ் கிளை செயலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும். 

உண்மையாக பாஜகவை எதிர்க்கக்கூடிய தைரியமும், தில்லும் காங்கிரசாருக்கு மட்டும்தான் இருக்கிறது. மோடி அரசு ராகுல்காந்தியை பேசவிடாமல் தடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட்டானது 8 பேர். அதில் 7 பேர் காங்கிரஸ். ஒரு ஆள் சிபிஎம். பாராளுமன்றத்தில் யார் பலமாக சண்டையிடுக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. துணை நிற்கிறோம்.. துணை நிற்கிறோம் என்றவர்கள் ஏன் சஸ்பெண்ட் ஆகாமல் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சைடு வாங்கிட்டுபோய் வணக்கம் சொல்லக்கூடிய பழக்கம் காங்கிரஸ்காரனுக்கு கிடையவே கிடையாது” என்றார்.

Advertisement