சனாதன விவாதத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை- மாணிக்கம் தாகூர் எம்பி

 
“வடிவேலு இல்லாத நாட்களில் நமக்கு பொழுதுபோக்கு அண்ணாமலை மட்டும்தான்” –  எம்.பி. மாணிக்கம் தாகூர்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல்காந்தி கடந்த 2022ம்ஆண்டு  செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை, 12 மாநிலங்கள் வழியாக, 3ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்தை, 150 நாட்களில் கடந்து பாரத ஒற்றுமை நடைபயணத்தை நிறைவு செய்தார். பாரத ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவு வெற்றி பாத யாத்திரையை கொண்டாடும் விதமாக சிவகாசியில், வேரறுப்போம் வெறுப்பு அரசியலுக்கு! நிலைநாட்டுவோம் ஜனநாயகத்தை!! என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக காமராஜர் சிலையிலிருந்து விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகன் தலைமையில் திரண்ட காங்கிரஸ் கட்சியினர், நகரின் முக்கிய சாலைகளின் வழியே பேரணியாக சென்று, மீண்டும் காமராஜர் சிலை முன்பாகவே தங்களது நடைபயணத்தை நிறைவு செய்தனர். 

இந்தியை திணிக்கவே 3 சட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன” - மாணிக்கம்  தாக்கூர் எம்.பி. குற்றச்சாட்டு | Names of 3 Acts have been changed to  impose Hindi says ...


அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர் எம்பி, “காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நடை பயணம் அரசியலில் ஒரு மாற்றமாக அமைந்து, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புதிய திசையை கொடுத்தது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் ஒரு புது வகையான அரசியலை தந்துள்ளது. நாட்டில் அரசியல் மாற்றம் என்பது கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கியுள்ளது. வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அன்பை விதைக்கின்ற ஒரு அரசியலை துவக்குவதற்கான ஒரு அத்தியாயமாக ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை பயணத்தை நினைவு கூறி, அதனை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் 900 மாவட்டங்களில் நடை பயணம் மேற்கொண்டுள்ளோம். 

நாட்டிலுள்ள அனைத்து மதங்களையும் காங்கிரஸ் கட்சி மதிக்கிறது. ஆனால் பாஜக,ஆர். எஸ். எஸ். போன்ற மதவாத கட்சிகள் மதஅடிப்படை விவாதங்களை தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறது. மத அடிப்படையில் எப்பொழுதெல்லாம் விவாதங்கள் விவாதிக்கப்படுகிறதோ அது பாஜகவின் களமாக பார்க்கப்படுகிறது. சனாதன விவாதங்களை வட இந்தியாவில் நடத்த நினைக்கின்றனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை. வேலைவாய்ப்பு மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சனை, விவசாயி பிரச்சனை, சிறு- குறுந்தொழில் பிரச்சனை, வெறுப்பு அரசியல் பிரச்சினை ஆகியவைகள் பற்றி மட்டுமே காங்கிரஸ் கட்சி பேச நினைக்கிறது. 

அரசியல் சாசனத்தில் இந்தியா என்ற பெயர் பாரத மென குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் கூட்டணி பெயர் இந்தியா என அமைந்ததால் பாஜக பயம் காரணமாகவும், இந்தியாவின் மீது பிரதமர் மோடிக்கு வெறுப்பு வந்ததின் காரணமாகவும்  விவாதித்து கொண்டிருக்கிறது. இந்தியா கூட்டணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ,கொள்கை வரைவு திட்டம் மற்றும் இட ஒதுக்கீட்டை உருவாக்கி தேர்தல் வரும் நேரத்தில் பிரதமர் வேட்பாளருக்கான அறிவிப்பு வெளிவரும். ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வெறும் விவாதமாக தான் இருக்கும்” என்றார்.