காங்கிரஸ் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை- மாணிக்கம் தாகூர்

 
மாணிக்கம்தாகூர் மாணிக்கம்தாகூர்

காங்கிரஸ் பற்றி அவதூறாக பேசிய மதுரை திமுக நிர்வாகி தளபதி மீது 20 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய மாணிக்கம் தாகூர்,  “காங்கிரசுக்கு மட்டும்தான் பாஜகவை எதிர்க்கும் தைரியம் உள்ளது. திமுகவின் பேச்சுவார்த்தைக்கு 70 நாளாக காத்திருக்கிறோம். தோழமைக்கு மரியாதை கொடுக்கிறோம். அதை எதிர்பார்க்கிறோம். சொத்து சுகம் கேட்கவில்லை, நான் கேட்பது மரியாதை மட்டும்தான். காங்கிரஸ் குறித்த திமுக நிர்வாகிகளின் பேச்சு வேதனை அளிக்கிறது. நீங்கள் செய்த தவறுக்காக பழியை சுமந்தவர்கள் நாங்கள்.

காங்கிரஸ் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. காங்கிரஸ் குறித்து அவதூறாக பேசிய மதுரை திமுக நிர்வாகி தளபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸில் பூத்திற்கு ஆள் இல்லை என சொல்லி இனி பயம் வர வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. எனக்கு எம்பி பதவி முக்கியமில்லை” என்றார்.

Advertisement