சதுப்பு நிலப்பகுதியில் காட்டுத்தீ - அரசுக்கு சீமான் கோரிக்கை!!

 
seeman

சதுப்புநிலப் பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் இனியாவது காலம் கடத்தாமலும், ஊழலின்றியும் அரசு ஈடுபட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

seeman

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சதுப்புநிலப் பகுதிகளும், பறவைகளின் உறைவிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வரும் நிலையில், இக்காட்டுத்தீயிற்கானக் காரணிகளைக் கண்டறிய வலியுறுத்துகிறேன். குப்பை மேட்டின் தன்மை போன்ற மானுடவியல் காரணிகளாக இருப்பின் போர்க்கால அடிப்படையில் அரசு எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று பொதுமக்கள் உற்று நோக்க வேண்டுகிறேன். பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் மற்றும் அருகாமையில் இருக்கக்கூடியக் குப்பைக்கிடங்கிலிருந்து வெளியேறும் வேதிமப்பொருட்கள் ஆகியவற்றால் ஏற்படும் சூழலியல் சீர்கேடுகள் குறித்துத் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது இந்தக் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

seeman

இழந்த சதுப்புநிலப் பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் இனியாவது காலம் கடத்தாமலும், ஊழலின்றியும் அரசு ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.