மருத்துவமனையில் திருட முயன்றவர் அடித்துக் கொலை - 12 பேர் கைது

 
tn

கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயன்ற ராஜா என்ற நபர், மருத்துவமனை காவலாளிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

murder

இதன் காரணமாக காவலாளிகள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மருத்துவமனைக்குள் புகுந்து கம்பிகளைத் திருட முயன்ற ராஜாவை, மருத்துவமனை காவலாளிகள் சரமாரியாகத் தாக்கிய நிலையில், அவர் அங்கேயே மயங்கி விழ, ராஜாவுக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

murder

உயிரிழந்த ராஜா  கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் . இவருக்கு சுகன்யா என்ற மனைவியும்,   ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ராஜா உயிரிழந்தது தொடர்பாக மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையில் மருத்துவமனை பாதுகாவலர்கள், நிர்வாகத்தினர் என 11 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.