ரூ.14 லட்சம் கொள்ளை போனதாக நாடகமாடியவர் கைது

 
s

சென்னையில் 14 லட்சம் ரூபாய் கொள்ளை போனதாக நாடகமாடியவர் கைது செய்யபட்டார்.


சென்னை பெரியமேடு, பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வருபவர் தன்வீர் அகமது இவரிடம் முகமது தன்சீர் (வயது25) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.தன்சீர் வழக்கம் போல கோயம்பேடு பழ மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளிடம் வசூலான தொகை ரூ14லட்சம் ரொக்கத்துடன் ஆட்டோவில் ஏறி பெரியமேடுக்கு புறப்பட்டார் ஆனால் வெகு நேரமாகியும் தன்சீர் அலுவலகம் வந்து சேரவில்லை மேலும் அவரது செல்போனும் "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டு இருந்தது இந்த நிலையில் இரவு 11மணிக்கு வேறு ஒரு செல்போன் எண்ணில் இருந்து முதலாளி தன்வீரை தொடர்பு கொண்ட தன்சீர் நெற்குன்றம் வழியாக வந்தபோது போக்குவரத்து போலீசார் இருவர் ஆட்டோவை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டு தனது பையில் வைத்திருந்த ரூ14லட்சம் பணம் மற்றும் செல்போனையும் பறித்து சென்றுவிட்டதாக தெரிவித்தார் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தன்வீர் உடனடியாக கோயம்பேடு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். 

இதையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை போட்டு பார்த்து ஆய்வு செய்தனர் அப்போது தனசீர் கூறியது போல போலீசார் வாகன சோதனை ஏதும் நடத்தவில்லை என்பது தெரிந்தது இதையடுத்து தன்சீரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் பணத்தை பொன்னேரியில் உள்ள நண்பர் ஒருவரது வீட்டில் பதுக்கி வைத்துவிட்டு போலீசார் வழிப்பறி செய்ததாக நாடகமாடியது தெரியவந்தது இதையடுத்து தன்சீரை கைது செய்த போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர்.