ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.35 லட்சத்தை இழந்தவர் விஷமருந்தி தற்கொலை

 
suicide

மேட்டூர் அருகே கொளத்தூரில் ஆன்லைன் வர்த்தகத்தில் 35 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த நபர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன்(40) இவர் சிம்கார்டு விற்பனை மற்றும் ரீசார்ஜ் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி தமிழ்(32) என்ற மனைவியும் 13 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். நாராயணன் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு 35 லட்சம் ரூபாய் பணத்தை இழந்து மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மேட்டூருக்கு வந்தார். அவரது மனைவி செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அழைப்பை ஏற்க்கவில்லை. 

மேட்டூர் அருகே கொளத்தூரில் உள்ள அவரது நண்பர் வடிவேல் மூலம் தேடிப் பார்த்தபோது மாங்காடு வாட்டர் டேங்க் அருகில் கோபிநாத் என்பவர் விவசாய நிலத்தில் நாராயணன் விஷம் அருந்தி இறந்து கிடந்தார். இது குறித்து கொளத்தூர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நாராயணன் சட்டத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .