ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சத்தை இழந்தவர் தூக்கிட்டு தற்கொலை!

 
death

சென்னை கோயம்பேட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்ச ரூபாயை பறிகொடுத்த வாலிபர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெட்டப்பாக்கம் அருகே மனைவி கோபித்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை ||  Husband commits suicide after wife gets angry near nettapakkam


சென்னை கோயம்பேடு முல்லை தெரு சீமாத்தமன் நகரை சேர்ந்தவர் தினேஷ்(41). இவர் கோயம்பேடு சின்மயா நகரில குளோபல் நெட் பிரௌசிங் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டின் படுக்கையறையில் சென்று உறங்கிவிட்டனர். தினேஷ் ஹாலில்  உறங்கி உள்ளார். இன்று அதிகாலை அவரது மனைவி அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, ஹாலில் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதனையடுத்து உடனடியாக கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தினேஷ் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் தான் பலரிடம் இருபது லட்சம் ரூபாய் அளவில் பணம் வாங்கி இருப்பதாகவும், அதில் சில லட்சம் வேறு நபர்களுக்கு கடனாக கொடுத்ததாகவும், அந்த பணம் திரும்பி வரவில்லை என்றும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாகவும்  குறிப்பிட்டுள்ளார், மேலும் யாருக்கெல்லாம் தினேஷ் பணம் கொடுத்துள்ளார், யாரெல்லாம் தினேஷுக்கு பணம் கொடுத்து உள்ளார்கள் என்பதை எழுதி வைத்துவிட்டு என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.