திருவிழாவில் பூக்குழி இறங்கியவர் தவறி விழுந்து பலி
Apr 16, 2025, 20:49 IST1744816779367

இராமநாதபுரம் அருகே குயவன்குடியில் சுப்பையா கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கியவர் தவறி விழுந்தவர் பலியானார்.
ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடியில் சுப்பையா கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழாவின் போது ஏப்., 10 ல் பூக்குழி இறங்கும் திருவிழா நடந்தது. வாலாந்தரவை கிராமத்தினை சேர்ந்த கேசவன் (56) பூக்குழியில் தவறி விழுந்தார். உடலில் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் பலியானார். இது குறித்து கேசவன் மனைவி விக்னேஷ்வரி புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.