ரேஷன் கடை ஊழியரிடம் த.வெ.க. நிர்வாகி எனக் கூறி ரூ.3,000 மாமூல் கேட்ட நபர்!

 
s

சேலம் பழைய  சூரமங்கலத்தில் ரேஷன் கடையில், தவெக நிர்வாகி எனக்கூறி ரேஷன் ஊழியரிடம் 3000 ரூபாய் மாமூல் கேட்டவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.


சேலம் மாவட்டம் சூரமங்கலம் பெரிய மோட்டூர் ரேஷன் கடைக்கு வந்த மணிகண்டன் என்ற நபர் தான் ஒரு TVK கட்சி நிர்வாகி என்றும் ஆதலால் ரேஷன் கடையினர் 3000 ரூபாய் மாமூல் கொடுக்க வேண்டும் என்றும் ரேஷன் கடையில் இருந்த பெண் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  உடனே சுற்றி வளைத்த பொதுமக்கள் அவரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். மேற்படி விசாரணையில் குறிப்பிட்ட நபர் சேலம் மாவட்டம் புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் காளியம்மன் கோவில் அருகிலேயே மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் நடிகர் விஜய் TVK கட்சி நிர்வாகி மணிகண்டன் (40) என்பது தெரியவந்தது. பிறகு காவல்துறைக்கு மேல் இடத்திலிருந்து வந்த உத்தரவு காரணமாக மணிகண்டன் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை.