41-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை! நொய்டாவில் நடுநடுங்க வைத்த சோகம்!
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 94-இல் உள்ள 'சூப்பர்நோவா' கட்டிடத்தின் 41-வது மாடி பால்கனி கம்பியில் தொங்கிக்கொண்டிருந்த 28 வயது வாலிபர் ஒருவர், அவரைக் காப்பாற்ற முயன்ற தொழிலாளர்களிடம் "நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன்" எனக் கூறிவிட்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் மானேசரைச் சேர்ந்த சம்பவ சம்பவ் ஜெயின் (28) என்ற அந்த வாலிபர், நொய்டாவிற்கு தனியாக வந்து சூப்பர்நோவா கட்டிடத்தில் உள்ள ஒரு ஏர்பிஎன்பி (Airbnb) அடுக்ககத்தில் ஒரு நாள் தங்கியிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சனிக்கிழமை காலையில், அருகில் உள்ள ஒரு வீட்டில் ஏசி (AC) பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், பால்கனி கம்பியில் தொங்குவதைக் கண்டு உடனடியாக அவரைக் காப்பாற்ற முயன்றனர். அவரிடம் பேசி அவரைத் தடுக்க முயன்றபோது, "நான் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறேன்" என்று கூறிவிட்டு அவர் திடீரென கீழே குதித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடய அறிவியல் குழுவினருடன் இணைந்து சம்பவ இடத்தில் சோதனையிட்டு ஆதாரங்களைச் சேகரித்தனர். அத்துடன் அடுக்ககத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், "முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த வாலிபர் கடும் மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.
🚨🇮🇳عاجل: وفاة رجل بعد القفز من الطابق 43 من سوبر نوفا في نويدا توفي رجل يبلغ من العمر 35 عامًا، يُدعى سامبهاف جاين من مانيسار، بعد قفزه من الطابق 43 من مجمع سوبر نوفا في القطاع 94، نويدا. وقالت الشرطة إنه حجز Airbnb في المبنى قبل يوم واحد فقط، ويقال إنه كان يتعرض لضغوط مالية… https://t.co/xjZmpIGN8Y
— ريك Rick (@RAzq31) October 4, 2026

