மோடி ரோடு ஷோவில் பங்கேற்கும் முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்
நாகர்கோவில் பிரதமரின் ரோடு ஷோ நிகழ்ச்சியை காண கடும் வெயிலில் மணிக்கணக்கில் காத்திருந்த நபர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோவில் வேப்ப மூடு சந்திப்பு பகுதியில் ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தி பிரச்சாரம் மேற்கொண்டார். 4 மணிக்கு பிரதமர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மதியம் முதலே ஏராளமான பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு இருந்த நிலையில் 4.30 மணி அளவில் பிரதமர் வருகை தந்தார். இந்த நிலையில் பிரதமரை காண வெயிலில் காத்திருந்த நபர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை அங்கிருந்து உடனடியாக தூக்கிச் சென்றனர்.பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரதமர் பங்கேற்பதற்கு சற்று முன் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



