பெண்கள் குளிப்பதை வீடியோ எடுப்பதையே வேலையாக வைத்திருக்கும் இளைஞர்- அதிர்ச்சியில் கிராம மக்கள்

 
ச் ச்

பெரம்பலூர் அருகே பெண்கள் குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்த நபர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

in Perambalur Man Capturing Woman Bath Including Wife Video 


பெரம்பலூர் மாவட்டம் வேம்பந்தட்டை அருகே வெங்கலம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது 29 வயது மகன் மோகன்ராஜ். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ராஜா என்பவரது மனைவி குளிக்கும் போது  தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுக்க முயன்றுள்ளார். இதையடுத்து சுதாரித்த அந்த பெண்மனி அவரிடமிருந்து செல்போனை பறித்துள்ளார். டர்ந்து கணவர் ராஜாவிடம் இதுகுறித்து தெரிவித்தபோது செல்போனை ஆய்வு செய்ததில் அதில் ஏதும் வீடியோக்கள் கிடைக்கவில்லை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் மிரட்டி விசாரித்ததில் செல்போனில் ஆஃப் லாக் மற்றும் வீடியோ பிரைவசி, பாஸ்வர்டுடன் கூடிய தனி ஆஃபில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட  பெண்களை ஆபாசமாக வீடியோ மற்றும் போட்டோஸ் எடுத்துள்ளது தெரியவந்தது. இதை தொடர்ந்து மோகன்ராஜை  பிடித்து தர்மஅடி கொடுத்த அப்பகுதி மக்கள் அவனை அரும்பாவூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதை தொடர்ந்து மோகன்ராஜின் செல்போனை பறிமுதல் செய்த பொதுமக்கள் அதை ஆய்வு செய்ததில் வெங்கலம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் உள்ள பெண்களின் அந்தரங்க வீடியோகள் உள்ளதையும் அதை தனது உறவினர் ஜெயபிரகாஷ், மற்றும் நண்பர்களுக்கு  பகிர்ந்துள்ளது யடுத்து தெரியவந்ததை காவல்துறையினர் மோகன்ராஜ் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகிய இருவர்மீதும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பெண்களை ஆபாசமாக / அந்தரங்கமாக படமெடுப்பது,ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது, உள்ளிட்ட குற்ற எண் - 33/25 த/பெ 77 BNS ACT , 67 A IT ACT (354 (c) IPC உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திதிருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் வெங்கலம் கிராம பொதுமக்கள்  மோகன்ராஜ் மூன்று வருடங்களாக இது போல் கீழ்த்தரமான  செயலை செய்து .வந்துள்ளதால் அவன் மீதும்  அவனது கூட்டாளிகள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவதுடன் அவனது கூட்டாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தி இன்று பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது
பேச்சுவார்த்தைக்கு வந்த காவல் துறையினரிடம் மறியலில் ஈடுபட்ட பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக காவல் துறையினர் உறுதி அளித்ததின் பேரில் சாலைமறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். கிராம மக்களின் சாலை மறியலால் பெரம்பலூர் -ஆத்தூர் சாலையில் சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.