நீலகிரியில் விஷம் வைத்து 2 புலிகளை கொன்றவர் கைது

 
நீலகிரி அவலாஞ்சியில் விஷம் வைத்து 2 புலிகளை கொன்றவர் கைது 

உதகை அருகே அவலாஞ்சி அணை பகுதியில் இரண்டு புலிகள் இறந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரியில் 2 பெண் புலிகள் இறந்ததற்கான உண்மையான காரணம் என்ன? வனத்துறை  கொடுத்த புது அப்டேட்! | Two female Tiger were found dead side by side in  the Emerald area of Nilgiri ...

இரண்டு ஆண் புலிகள் அவலாஞ்சி அணை முகத்துவாரத்தில் இறந்து கிடப்பதை கண்டு வனத்துறையினர் புலிகளை மீட்டு பிரதே பரிசோதனை மேற்கொண்டனர். இதில் ஒரு புலிக்கு உடலில் எந்த காயமும் இல்லாமலும் மற்றொரு புலிக்கு முதுகு  மற்றும் கழுத்தில் காயம் இருப்பதை உறுதி செய்திருந்தனர். மேலும்  புலிகள் இறந்த இடத்தின் அருகாமையில் மாடு ஒன்று இறந்திருப்பதை உறுதி செய்த வனத்துறை மாட்டின் மீது விஷம் தடவப்பட்டு மாட்டின் மாமிசத்தை புலி உட்கொண்டதால் புலி இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் மாட்டின் மீது விஷம் தடவி புலிகள் கொல்லப்பட்டதற்கு முழு காரணமாக இருந்த மாட்டின் உரிமையாளர் சேகர் (58) என்பவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். சேகரின் மாட்டை புலி அடித்துக் கொன்றதால் பழிக்குப் பழியாக புலியை கொன்றதாக விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.