17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் கைது

 
marriage

விராலிமலை அருகே 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபரை கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

விராலிமலை அருகே உள்ள கல்குடியை சேர்ந்தவர் சாந்தி. இவரது 17 வயதான மகள் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் உள்ள ஒரு தனியார் பஞ்சு மில்லில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான கல்குடிக்கு வந்த அவர் கடந்த 9 ம் தேதி  வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது அவர் பஞ்சுமில்லுக்கு செல்லலாததாக கூறப்படுகிறது, உறவினர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் மாயமான அவரது மகள் கிடைக்காததால் இதுகுறித்து சாந்தி விராலிமலை காவல் நிலையத்தில் கடந்த 15 ஆம் தேதி புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா மாயமான இளம்பெண்ணின் சக ஊழியர்கள், தோழிகளிடம் விசாரணை நடத்தியதோடு மொபைல் போன் கால்களை வைத்து ட்ரேஸ் செய்து பார்த்ததில் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அருள் பிரசாத் (எ) வடிவேலுவுடன் அடிக்கடி மொபைல் போனில் மாயமானபெண் பேசியது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து ஜிபிஎஸ் கருவி உதவியுடன் அந்த போனின் இருப்பிடத்தை தேடியபோது நாகபட்டினம் மாவட்டம்,  திருத்துறைப்பூண்டியை காட்டியுள்ளது. இதனையடுத்து திருத்துறைப்பூண்டி நெடும் பாலத்திற்கு சென்ற போலீசார் வடிவேலு வீட்டின் உள்ளே இருந்த 17 வயது சிறுமியை மீட்டு வடிவேலுவை கைது செய்து விராலிமலை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் அப்பெண்ணை திருமணம் செய்ததை வடிவேல் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக மாணவியை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும் மைனர் பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்த குற்றத்திற்காக வடிவேல் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த விராலிமலை போலீசார் அவரை கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.