மேற்குவங்கத்தில் தவெக அலுவலகம் திறப்பு- மம்தா அதிர்ச்சி
மேற்குவங்கத்தில் தவெக அலுவலகத்தை திறந்து பல்வேறு தொண்டு பணிகளில் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
கேரளம், புதுச்சேரி, தெலுங்கானா பகுதிகளில் தவெகவை உருவாக்க திட்டமிட்டுவருகிறது. அதற்கான வியூகங்கள் வகுக்க தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் மைனாரிட்டி அரசு(கூட்டணி அரசு) அமைந்ததைபோல 2029 மத்தியிலும் அப்படிப்பட்ட அரசு அமைய தவெக எதிர்பார்க்கிறது. தென்மாநிலங்களில் அதிகபட்சமாக 60 தொகுதிகளை பெற்றுவிட்டால் மத்தியில் அமையும் மைனாரிட்டி அரசுக்கு ஆதரவளித்து தன் கட்டுப்பாட்டில் வழிநடத்த திட்டமிட்டுவருகிறது. முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் உரைகள் பிற பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல்வேறு சமூக தளங்களில் டிரெண்டாக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் தமிழகத்திற்கு அப்பால் தனது அமைப்பு ரீதியான விரிவாக்கத்தைத் தொடங்கியுள்ள தவெக, மேற்கு வங்காளத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள ஃபகுபூரில் தனது முதல் கட்சி அலுவலகத்தைத் திறந்துள்ளது.

