மம்தா- ஸ்டாலின் சந்திப்பு! 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தம்?

 
மம்தா

2 நாள் பயணமாக சென்னை வந்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில், முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

mkstalin


முதலமைச்சர் ஸ்டாலின் என்னுடைய அரசியல் ரீதியான நண்பர், அரசியல் தொடர்பான விஷயங்கள் குறித்து ஸ்டாலினிடம் விவாதிப்பேன் என கொல்கத்தாவில் பேட்டியளித்திருந்த மம்தா பானர்ஜி முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்திப்பது தேசிய அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில், ஒருபுறம் நிதிஷ்குமார், சந்திரசேகரராவ் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இருக்கும் நிலையில், மறுபுறம் மம்தாவும் தேசிய அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

mamtha

மம்தாவுடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், “அவசியம் மேற்குவங்கத்திற்கு விருந்தினராக வரவேண்டும் என மம்தா தனக்கு அழைப்பு விடுத்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு, அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை” எனக் கூறினார்.