மம்தாவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி..! எம்பி பதவியை ராஜினாமா செய்த பிரபல நடிகை..!

 
1

சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின்பு, திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் ஒவ்வொருவர் விலகி வருகின்றனர். நேற்று அக்கட்சியின் முக்கிய தலைவரான மதன் மித்ராவும் விலகி மம்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி கொடுத்தார். அனைவரும் மம்தா, அவரது உறவினர் அபிஷேக் பானர்ஜியை விமர்சித்தனர். ஆனால், இதனை கண்டு கொள்ளாத மம்தா கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப போவதாக தெரிவித்துள்ளார்.

அபிஷேக் பானர்ஜிக்கு ஆதரவாக உள்ளார்.இந்நிலையில் அடுத்ததாக, ராஜ்யசபா எம்பி ஆக இருக்கும் நடிகை ருக்மணி மாலிக் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடந்த ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், மே மாதம் பதவியேற்றுக் கொண்டார். ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபா அவைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.

இந்நிலையில் மம்தா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளதாவது; எம்பி குறித்த செய்தியை பார்த்தேன். அவர் முன்னரே, இமெயில் வாயிலாக தெரிவித்து விட்டார். இன்று அவர் பாஜ தலைவரை பார்த்துள்ளார். நெருக்கடிக்கு உள்ளானவர்கள் ஜூலை 21க்குள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எங்கு வேண்டுமானலும் செல்லுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.