இந்தியா கோப்பையை வெல்வதை பார்க்க ஒட்டுமொத்த தேசமும் காத்திருக்கிறது - மம்தா பானர்ஜி

 
mamata

உலக கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. பிற்பகல் சரியாக 2 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. நடப்பு உலக கோப்பை போட்டியில் தோல்வியே சந்திக்காத அணியாக திகழும் இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 6வது முறையாக கோப்பையை கைப்பற்ற ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டி வருகிறது. 


இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில்,  ஒரு சிறந்த வரலாற்று சந்தர்ப்பத்திலும், உலக அரங்கில் மிகவும் வியத்தகு கிரிக்கெட் போருக்கு முன்னதாகவும் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள். நீங்கள் கோப்பையை வெல்வதை பார்க்க ஒட்டுமொத்த தேசமும் காத்திருக்கிறது. எங்களை பெருமைப்படுத்துங்கள் வீரர்களே, இன்று எங்களை பெருமைப்படுத்துங்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.