மாமல்லபுர புராதன சின்னங்களை நாளை கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம்

 
Mamallapuram Mamallapuram

உலக பாரம்பரிய தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் நாளை கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம் என தொல்லியல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geographic Indications,மாமல்லபுரம் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு.! -  geographic indications for mamallapuram sculptures. - Samayam Tamil

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள பல்லவ மன்னர்களின் கலைச்சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜூனன் தபசு, கிருஷ்ண மண்டபம் மற்றும் வெண்ணை உருண்டை பாறை, புலிகுகை உள்ளிட்ட புராதன சின்னங்கள் அமைந்துள்ளன. இங்கு, புராதன சின்னங்களை அருகில் கண்டு ரசிப்பதற்காக இந்தியர்களுக்கு ரூ.40 மற்றும் வெளிநாட்டவர்களுக்கு ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் நாளை (18 ம் தேதி வெள்ளிக்கிழமை) உலக பாரம்பரிய தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகள் எவ்வித நுழைவு கட்டணமின்றி புராதன சின்னங்களை கண்டு ரசிக்கலாம் என தொல்லியல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.