“2024 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும்”- மல்லிகார்ஜூன கார்கே

 
மல்லிகார்ஜுன கார்கே

தேர்தல் ஆணையர் நியமிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம்  வழங்கிய புதிய தீர்ப்பு குறித்து எங்கள் குழு ஆராய்ந்து வருகிறது, விரைவில் அது குறித்த எங்கள் கருத்தை விரிவாக தெரிவிப்போம் என இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்  மல்லிகார்ஜூன  கார்கே தெரிவித்துள்ளார்.

New Congress Chief Mallikarjun Kharge To Take Charge On October 26 |  மல்லிகார்ஜூன் கார்கே வரும் 26 ஆம் தேதி காங். தலைவராக பதவியேற்க உள்ளதாக தகவல்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் தனியார் விடுதியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்  மல்லிகார்ஜூன கார்கேவுடன் தலித் அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், செல்வப் பெருந்தகை, தங்கபாலு உள்ளிட்ட பலர் உடன் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, “இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பது  தொடர்பாக உச்சநீதி மன்றம்  வழங்கிய புதிய  தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைமை குழு ஆராய்ந்து வருகிறது. விரைவில் இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் அதில் விரிவாக எங்கள் கருத்தை தெரிவிப்போம் காரணம்?  முழு  தீர்ப்பையும் ஆராய வேண்டி உள்ளது. இந்த தீர்ப்பு தனித்துவமானதாக இருக்குமா?  என்பதை பார்க்க வேண்டும். இந்த பிரச்னையில் தற்போது  ஏதாவது ஒரு கருத்தை  வழங்கியிருக்கிறதே பரவியில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பது தற்போதைய பிரச்சனை அல்ல. ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தங்களின் விருப்பம். 2024 ஆம் ஆண்டு தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும். பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தும் முயற்சியில் மு.க. ஸ்டாலின் ஈடுபட  வேண்டும்.” எனக் கூறினார்.