”மத்திய அமைச்சராக விரும்பும் துரை வைகோ” - மல்லை சத்யா

 
மல்லை சத்யா மல்லை சத்யா

துரை வைகோ மத்திய அமைச்சராக வேண்டும் என்று விருப்பம் இருப்பது தெரிவதாக மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கூறினார்.

1

மதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கட்சியை விட்டு வெளியேறாவிட்டாலும் அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது. துரை வைகோவை பின்பற்றி அவர் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதனால், மல்லை சத்யா மற்றும் துரை வைகோ இடையே பனிப்போராக இருந்த இந்த விவகாரம் கடந்த ஏப்ரல் மாதம் வெளிப்படையாக வெடித்தது. இதைத் தொடர்ந்து, வைகோவின் முயற்சியால் இருவரும் சமாதானப்படுத்தப்பட்டனர். இதனால், இருவருக்கும் இடையே இருந்த வந்த மோதல் போக்கு ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது என அனைவரும் நினைத்த நிலையில், மல்லை சத்யா மீது வைகோ அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துவருகிறார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, “துரை வைகோ மத்திய அமைச்சராக வேண்டும் என்று விருப்பம் இருப்பது தெரிகிறது. பாஜகவுடன் கூட்டணி சேர்வதற்கான காரணத்தை அவர் தேடி கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் வேண்டாம் என்று பெயருக்கு சொல்லிவிட்டு, பிறகு பதவியை ஏற்பது அவரது வழக்கமான செயல்பாடுதானே! துரை வைகோ ஒரு கார்ப்பரேட்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.